2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

தேசத்தின் மனநிலையை பாருங்கள்...

Editorial   / 2022 ஒக்டோபர் 31 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐப்பசி 2022க்கான “தேசத்தின் மனநிலை” வாக்கெடுப்பின் முடிவுகளை வெரிட்டே ரிசேர்ச் வெளியிடுகிறது

அரசாங்கத்திற்கான அங்கீகாரம் உயர்வடைந்துள்ளது, ஆனால் மிகக்குறைந்தளவான 10% என்ற அளவில் மட்டுமே உயர்ந்துள்ளது.

“தேசத்தின் மனநிலை” எனும் Gallup பாணியிலான வாக்கெடுப்பின் இரண்டாவது கட்டம் ஒக்டோபர் மாதத்தில் வெரிட்டே ரிசேர்ச்சினால் முன்னெடுக்கப்பட்டது. அரசாங்கம், நாடு, பொருளாதாரம் ஆகியவை குறித்த அங்கீகாரம், திருப்தி மற்றும் நம்பிக்கை குறித்து இது மதிப்பிட்டது.

வெரிட்டே ரிசேர்ச் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட கணக்கெடுப்பு கருவியின் ஒரு பகுதியாக இந்த வாக்கெடுப்பு முன்னெடுக்கப்பட்டது. இது பிற நிறுவனங்களும் இலங்கையின் மனநிலையை ஆராய்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

  1. அரசாங்கத்தை அங்கீகரிக்கும் வீதம் | 10% | “தற்போதைய அரசாங்கம் செயல்படும் விதத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா இல்லையா?” என்ற கேள்விக்கு 10 சதவீதமானவர்கள் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்கள். இது தை மாதத்திலிருந்த மிகக்குறைந்த 10% என்பதற்கு சமமானதாகும். ஆனால் ஆனி மாதத்திலிருந்த 3% என்பதிலும் பார்க்க மேம்பட்ட நிலையாகும்.
  1. இலங்கை தொடர்பில் திருப்தி | 7% | “பொதுவாக இலங்கையில் நடைபெறும் விடயங்கள் தொடர்பில் நீங்கள் திருப்தியடைகிறீர்களா இல்லையா? என்ற கேள்விக்கு 7 சதவீதமானவர்கள் மட்டுமே திருப்தியடைவதாகத் தெரிவித்துள்ளனர். தை மாதத்தில் இது 6 சதவீதமாகவும்  மற்றும் ஆனி மாதத்தில் 2022 இல்  2 சதவீதமாகவும்  காணப்பட்டது
  1. பொருளாதாரம் குறித்த நம்பிக்கை | எதிர்மறை (-) 77.9 | பொருளாதாரத்தின் நம்பிக்கை தொடர்பில் மதிப்பெண்களை வழங்குவதற்கு பொருளாதார நிலைமை மற்றும் எதிர்கால நிலைமை குறித்த பல்தேர்வு கேள்விகள் பயன்படுத்தப்பட்டன. இதற்கான மதிப்பெண்கள் எதிர்மறை (-) 100 இலிருந்து நேர்மறை (+) 100 வரை இருக்கலாம். பூச்சியத்திற்கு மேற்பட்ட மதிப்பெண், மக்களில் பலர் பொருளாதார நிலைமைகளை எதிர்றையாக அன்றி சாதகமாகப் பார்ப்பதாக அர்த்தப்படும். அனைவரும் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளதாகவும் (நன்றாக அல்லது மிக சிறப்பாக உள்ளதிற்கு பதிலாக) தொடர்ந்து மோசமடைந்து வருவதாகவும் (மேம்படுவதிற்கு பதிலாக)  கருதினால் மதிப்பெண் (-) 100 ஆக இருக்கும். ஐப்பசி 2022 இல், 0.5% பேர் பொருளாதார நிலை சிறப்பானது என மதிப்பிட்டுள்ளனர், 4.8% பேர் இது நல்லது என மதிப்பிடுகின்றனர்; மேலும் 16.2% பேர் இது சிறப்பாகி வருவதாக மதிப்பிட்டுள்ளனர். இதன் விளைவான பெறுபேறு (-) 77.9, அண்ணளவாக (-) 78. இவ் மதிப்பீடு தை மாதத்தில்  (-) 83 ஆகவும் ஆனி மாதத்தில் (-) 96 ஆகவும் காணப்பட்டது.

தேசத்தின் மனநிலையை” நடைமுறைப்படுத்துதல்

நாடு தழுவிய தேசிய ரீதியிலான பிரதிநிதித்துவத்தைக் கொண்ட மாதிரி பதில்களை இந்த வாக்கெடுப்பு அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதற்காக ஜுன் 2022ல் 1,018 இலங்கையர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மாதிரி மற்றும் வழிமுறையில் அதிகபட்ச பிழைக்கான வரம்பு 3 சதவீதத்தை விடக் குறைவாகவும், நம்பக இடைவெளி 95 சதவீதமாக இருப்பதையும் உறுதிசெய்யும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. வாக்கெடுப்புக்கான பங்காளர் வான்கார்ட் சர்வே (பிரைவட்) லிமிடெட் (Vanguard Survey (Pvt) Ltd) ஆகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .