2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

தீக்குச்சால் குழந்தையின் வாயில் சுட்ட தாய் கைது

Editorial   / 2023 செப்டெம்பர் 28 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது மூன்று வயதுக் குழந்தையின் வாயில் தீக்குச்சியை பற்றவைத்து எரித்த  தாயை சந்தேகத்தின் பேரில் கைது செய்ததாக தியுலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

திவுலபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய பெண்ணொருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த குழந்தையின் மேல் உதட்டில் தீக்காயங்களின் அடையாளமும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தூசன வார்த்தைகளை கூறியதால், நிறுத்தும்படி பயமுறுத்துவதற்காக, தீக்குச்சியைக் கொளுத்தி, தனது பிள்ளையின் வாயில் நெருக்கமாக வைத்திருந்ததாக சந்தேகநபர் கூறுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அப்போது குழந்தையின் மேல் உதடு எரிந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் 118 அவசர அழைப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் பேரில் திவுலப்பிட்டி பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு குழந்தை தங்கியிருந்த வீட்டை சோதனையிட்டதுடன் விசாரணைகளை ஆரம்பித்ததுள்ளதாக தெரிவித்த பொலிஸார் அந்தக்குழந்தையின் தாயை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .