2024 செப்டெம்பர் 08, ஞாயிற்றுக்கிழமை

“திருத்தங்கள் வேண்டாம்: தேர்தலை நடத்து”

Editorial   / 2024 ஜூலை 18 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியலமைப்பு திருத்தங்கள் அல்ல, ஜனாதிபதி தேர்தலை நடத்துவதே இந்த தருணத்தில் நாட்டிற்கு தேவையாகும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான  பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரப் பிரச்சினை 2028ஆம் ஆண்டு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ரணவக்க, 2028ஆம் ஆண்டிற்குப் பின்னர் அரசாங்கத்திற்கு கடனை செலுத்துவதற்கான வேலைத்திட்டம் தேவை என்றார்.

அப்போது, ​​நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தை குடியரசு முன்னணி முன்வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கம்பஹாவில் நடைபெற்ற 'நாட்டிற்கு ஒருமித்த படி' நடைமுறை நிகழ்ச்சித் திட்டத்தின் சுருக்கம் அடங்கிய துண்டுப் பிரசுர விநியோகம் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X