Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Janu / 2024 நவம்பர் 20 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் பொது வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு மரணமடைந்த இளம் தாய் மற்றும் சேயின் சடலங்கள் மேலதிக பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு செவ்வாய்க்கிழமை (19) இரவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மன்னார், பட்டித்தோட்டம் பகுதியை சேர்ந்த 28 வயதுடைய இளம் தாய் வேணுஜா என அழைக்கப்படும் ஜெகன் ராஜசிறி பிரசவத்திற்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சையின் போது தாயும் சேயும் மரணமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் உறவினர்கள், பெற்றோர்கள் உட்பட பொதுமக்கள் ஒன்றினைந்து மகப்பேற்று விடுதியில் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில் வைத்தியசாலையில் பதட்டமான நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் நீதவான் இறந்த தாய் மற்றும் சேயின் சடலங்களை பிரதே பரிசோதனைக்காகவும் மேலதிக விசாரணைகளுக்காகவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்
நீதவானின் உத்தரவுக்கமைய சடலங்கள் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
எஸ்.ஆர்.லெம்பேட்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
13 minute ago
24 minute ago