Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2023 ஒக்டோபர் 03 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
தாயின் அனுமதியுடன் 13 வயதான சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கர்ப்பிணியாக்கிய குற்றச்சாட்டின் கீழ் இளைஞன் கைது செய்யப்பட்டு, செவ்வாய்க்கிழமை (03) வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மெல்சிறிபுர பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு குருநாகல் நீதவான் ஆஜர்படுத்தப்பட்ட போதே நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
வறக்காபொல பிரதேசத்தில் தற்காலிகமாக வசித்துவரும் 32 வயதான இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர், திருமணமானவர்.
கனரக வாகனத்தை செலுத்தும் தந்தைக்கு உதவியாளராக பணியாற்றிய நபரே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி சிறுமியை கர்ப்பிணியாக்கியுள்ளார்.
களனியுடன் தந்தையுடன் பணியாற்றும் நபர், தந்தையுடன் வீட்டுக்கு அடிக்கடி வந்துள்ளார். அவ்வாறு வரும்போது அந்த நபருக்கும், சாரதியின் மனைவிக்கும் இடையில் கூடாத உறவு ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது வீட்டுக்கு வரும் அந்த நபர், வீட்டிலும் தங்கியிருந்துள்ளார்.
அப்போது, தாயின் அனுமதியுடன், அவளது மகளை பல தடவைகள் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமடைந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நேர்ந்ததை தந்தையிடம் தெரிவித்துள்ளார். அதன்பின்னர் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, அவரை பிணையில் எடுப்பதற்கு அந்த சிறுமியின் தாய், முன்வந்திருந்தமை விசேட அம்சமாகும்.
ஐந்து மாத கர்ப்பிணியான சிறுமி, கலிகமுவ சிறுவர் நன்னடத்தை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். திடீரென நோய்வாய்ப்பட்டமையால் அச்சிறுமி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த பாலியல் வன்புணர்வு சம்பவம் இடம்பெற்றதை தன்னுடைய சகோதரனும் சகோதரியும் கண்டுள்ளனர் என்றும் பாதிக்கப்பட்ட சிறுமி தெரிவித்துள்ளார்.
தன்னை வன்புணர்வுக்கு உட்படுத்துவதை தடுத்து நிறுத்துமாறு தனது தாயிடம் பல முறை கோரிக்கை விடுத்திருந்த போதிலும், அதற்கு தாய் செவிசாய்க்கவில்லை என்றும் அச்சிறுமி தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago