Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை
Editorial / 2025 ஜனவரி 09 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். தில்லைநாதன்
வல்லைப் பகுதியில் புதன்கிழமை (08) இரவு 7.30 மணியளவில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தவில் வித்துவான் விஜயகுமாரின் மகனான, 21 வயதான விஜயகுமார் மணிகண்டன் என்ற இளைஞன், பரிதாபமாக உயிரிழந்துள்ளார்
இவர், யா / நெல்லியடி மத்திய கல்லூரி பழைய மாணவனும் பிரபல தவில் வித்துவான் விஜயகுமாரின் புதல்வனும் ஆவார்.
யாழ். நகர் பகுதியில் இருந்து பருத்தித்துறை நோக்கி வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த இளைஞன், வல்லைப் பகுதியில் மாட்டுடன் மோதி விபத்துக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.
படுகாயமடைந்த இளைஞர் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
சடலம் உடற்கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
43 minute ago
55 minute ago