Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 12, சனிக்கிழமை
Janu / 2024 ஒக்டோபர் 15 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாதி கட்டி முடிக்கப்பட்ட இரண்டு மாடி வீட்டின் மேல் மாடியின் பாதுகாப்பற்ற பகுதியில் இருந்து தவறி விழுந்து பட்டதாரி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றிய நிவித்திகல, கால்லகே மண்டிய பிரதேசத்தை சேர்ந்த 30வயதுடைய ஹன்சனி பாக்யா ஜயதிலக்க என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் பத்தரமுல்லை பிரதான வீதி, சம்பத் பிளேஸில் உள்ள இரண்டு மாடி வீட்டின் மேல் மாடியின் பின் பகுதியில், மேலும் மூன்று யுவதிகளுடன் தற்காலிகமாக தங்கி வந்துள்ளார். குறித்த பெண் கடந்த வெள்ளிக்கிழமை (11) அன்று வேளைக்கு சென்று மாலை 6.40 மணியளவில் வந்த நிலையில் அவரின் நண்பி அவளை அழைத்த போது தான் இரவு உணவிற்காக கொண்டு வந்த இறால் மீனை தயார் செய்வதாக கூறியுள்ளார்.
அதன் பின்னர் நண்பி குளியலறைக்கு சென்ற நிலையில் , அலறலுடன் பலத்த சத்தம் கேட்டதும் வெளியே வந்து பார்த்த போது தனது தோழி மேல் மாடியில் இருந்து கீழே விழுந்து கிடப்பதைக் கண்டு, உடனடியாக உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார்.
அதனையடுத்து அயலவர்கள் பெண்ணை சுவசரிய ஆம்புலன்ஸ் மூலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago