Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 19, வியாழக்கிழமை
Editorial / 2024 டிசெம்பர் 19 , பி.ப. 02:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் (E01) தவறான திசையில் வாகனத்தை செலுத்திய ஒருவரை அதிவேக நெடுஞ்சாலை பொலிஸாரால் புதன்கிழமை (18) கைது செய்துள்ளனர்.
இதனை அதிவேக நெடுஞ்சாலை நடவடிக்கை, பராமரிப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவு உறுதிப்படுத்தியது.
மனநலம் குன்றிய ஒருவரை சிகிச்சைக்காக ஏற்றிக்கொண்டு மத்தலயிலிருந்து கொட்டாவ நோக்கிச் சென்ற கார் வெலிப்பென்ன தெற்கு அதிவேக நெடுஞ்சாலை சேவைப் பகுதியில் நிறுத்தப்பட்டது.
வாகனத்தை ஓட்டிச் சென்ற நபர், ஓய்வறையைப் பயன்படுத்துவதற்காக நிறுத்தியதாக பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சாரதி, கழிவறையைப் பயன்படுத்துவதற்காக காரை விட்டு வெளியேறிய சிறிது நேரத்திலேயே, மனநலம் குன்றிய நபர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் காரை மாத்தறை நோக்கி அதிவேக நெடுஞ்சாலையில் தவறான திசையில் ஓட்டிச் சென்றுள்ளார். இதனால் ஏனைய வாகன சாரதிகளுக்கு பெரும் அசௌகரியம் ஏற்பட்டது.
கார் தவறான திசையில் மாத்தறை நோக்கி சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரம் பயணித்தது. பின்னர், குருந்துகஹஹெதெக்ம இடமாறலில் அதிவேக நெடுஞ்சாலை பொலிஸார் காரை நிறுத்தி வாகனத்தை செலுத்தி வந்த நபரை கைது செய்தனர்.
நிலைமையை ஆராய்ந்த பின்னர், பொலிஸார், காரை விடுவித்து, நோயாளிக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு சாரதிக்கு அறிவுறுத்தினர்.
இச்சம்பவத்தின் போது விபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
53 minute ago
3 hours ago