2025 மார்ச் 28, வெள்ளிக்கிழமை

தெவுந்தரவில் துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர் கைது

J.A. George   / 2025 மார்ச் 25 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெய்வேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு ஆலயத்திற்கு முன்பாக உள்ள சிம்மாசன வீதியில் வைத்து இளைஞர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் நேற்று (23) கந்தர பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்த வந்ததாக சந்தேகிக்கப்படும் வேனுக்கு தீ வைத்து அசம்பாவிதம் ஏற்படுத்திய குற்றத்திற்காக சந்தேகநபர் மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டு கந்தர பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெவிநுவர பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடையவர். சம்பவம் தொடர்பில் கந்தர மற்றும் மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .