Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை
Freelancer / 2025 மார்ச் 13 , மு.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளரையும் பாதுகாத்து இலங்கையில் தரமான பொருட்கள் மற்றும் சேவைகளின் விநியோகத்தை உறுதி செய்வதற்குத் தேவையான கொள்கை ரீதியான மாற்றங்கள் மற்றும் நிறுவனக் கட்டமைப்பு மேம்பாடுகளுக்கு ஜப்பான் ஆதரவு தெரிவித்துள்ளது.
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் மற்றும் ஜப்பான் நியாய வர்த்தக ஆணைக்குழு என்பன இதற்கு ஆதரவளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கும் குறித்த நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
வர்த்தகத்தில் நியாயபூர்வமிக்க தன்மையை உருவாக்குவதன் மூலம் நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளர்கள் பாதுகாக்கப்படுவதுடன், இதன் மூலம் நாட்டில் போட்டிமிக்க சந்தை உருவாக்கப்படுகின்றது எனவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
1 hours ago