2025 மார்ச் 11, செவ்வாய்க்கிழமை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முறையில் மாற்றம்?

Freelancer   / 2025 மார்ச் 10 , பி.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையால் குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையிலான பரீட்சை ஒன்று 2028 ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் இன்று (10) விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அத்துடன், புலமைப்பரிசில் பரீட்சைகளால் குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக அரசாங்கத்தால் நிபுணர் குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளதாகவும் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

புலமைப்பரிசில் பரீட்சை ஒரு போட்டிப் பரீட்சையாக மாறியிருப்பது பாடசாலைகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகளால் ஏற்பட்டதாக சுட்டிக்காட்டிய பிரதமர், பாடசாலைகளுக்கு இடையிலான தர ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டார். R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .