2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

தேர்தல் விடுமுறை குறித்து விஷேட அறிவிப்பு

Freelancer   / 2025 ஏப்ரல் 25 , பி.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொழிலாளர் ஒருவர் வாக்களிப்பதற்காக விடுமுறை கோரினால், அது தொடர்பாக பணியமர்த்துபவர், தொழிலாளருக்கு போதுமானதாக கருதப்படும் குறைந்தபட்சம் இரண்டு மணி நேர பணி விடுமுறையை ஊதியத்துடன் வழங்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிக்கை  ஒன்றை வெளியிட்டுள்ளது.

வாக்களிப்பதற்காக அனைவருக்கும் அவர்களது நிறுவனங்கள் விடுமுறை வழங்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு வழங்கப்படும் விடுமுறை காலம், தற்காலிக தொழிலாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய சிறப்பு விடுமுறையாக கருதப்பட வேண்டும் எனவும், இது தொழிலாளர்களின் வழக்கமான விடுமுறை உரிமைகளுக்கு வெளியில் இருக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .