2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை

தேர்தல் சட்ட மீறல்கள்;06 முறைப்பாடுகள் பதிவு

Simrith   / 2025 ஏப்ரல் 06 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தல்கள் தொடர்பான தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக இலங்கை பொலிஸருக்கு ஆறு (06) முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

பொலிஸாரின் கூற்றுப்படி, இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்து 2025 ஏப்ரல் 02 முதல் 05 வரை முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளன. 

பேலியகொட பகுதியிலிருந்து அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துவது தொடர்பாகவும், மற்றொன்று றாகமவிலிருந்து தேர்தல் கட்அவுட்கள் காட்சிப்படுத்தப்படுவது தொடர்பாகவும் ஏப்ரல் 02 ஆம் திகதி இரண்டு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

ஏப்ரல் 04 ஆம் திகதி, களனியில் இருந்து தேர்தல் கட்அவுட் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடு அளிக்கப்பட்டது. 

ஏப்ரல் 05 இல், ஒன்று களனியிலிருந்து சுகாதார முகாம் நடத்துவது தொடர்பாகவும், இரண்டு மொனராகலையிலிருந்தும், வேட்பாளரின் துண்டுப்பிரசுரங்களை விநியோகிப்பது தொடர்பாகவும், மற்றொன்று ஒரு வேட்பாளரை ஒத்த படங்களைக் காட்சிப்படுத்தியமை தொடர்பாகவும் மொத்தமாக 3 முறைப்பாடுகள் கிடைத்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X