2025 மார்ச் 17, திங்கட்கிழமை

தேர்தல் ஆணைக்குழு அவசர அறிவுறுத்தல்

S.Renuka   / 2025 மார்ச் 17 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் திகதிகளில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையும் நடைபெறும் என்பதால், வேட்புமனுக்களை சமர்ப்பிக்கும் அனைத்து வேட்பாளர்களும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணைக் குழு தெரிவித்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய தேர்தல் ஆணையத் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க  இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஐஜிபிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், எந்தவொரு வேட்பாளரும் இதுபோன்ற சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டால் சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும் என்றும் அவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.

எதிர்வரும் 20ஆம் திகதி நண்பகல் 12 மணிக்குப் பிறகு வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது முடிவடையும் என்றும், அதன் பிறகு எந்த அணிவகுப்பு, வாகன அணிவகுப்பு அல்லது ஒன்றுகூடல் சட்டத்தால் அனுமதிக்கப்படாது என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை திங்கட்கிழமை 17ஆம் திகதி முதல் மார்ச் 26 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதால், அதுவரை பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு எந்தவிதமான தொந்தரவும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X