2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

திருடப்பட்டு குவிக்கப்பட்ட சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் : ஜனாதிபதி

Freelancer   / 2025 மார்ச் 31 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமாக ஈட்டிய சொத்துக்களை அரசுடமையாக்கும் சட்டமூலம் ஏப்ரல் 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். 

மாத்தறை வெலிப்பிட்டிய பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போது ஜனாதிபதி இதை குறிப்பிட்டார்.

மேலும், மோசடி செய்பவர்கள் மற்றும் ஊழல்வாதிகளுக்கு மீண்டும் நாட்டை ஆட்சி செய்ய வாய்ப்பு வழங்கப்படாது என்றும் சுட்டிக்காட்டினார். 

திருடப்பட்டு குவிக்கப்பட்ட சொத்துக்களை அரசுடமையாக்கும் சட்டத்தை வரும் 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவோம். சட்டவிரோதமாக வாங்கிய சொத்துக்களை பறிமுதல் செய்யும் சட்டம். 

யாரையும் தனிப்பட்ட முறையில் பழிவாங்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. "எங்கள் தாய்நாட்டில் சட்டத்தின் ஆட்சியையும் இறையாண்மையையும் மீண்டும் நிலைநாட்டுவதே எங்கள் எதிர்பார்ப்பு." என்றார்.  R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X