Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Editorial / 2023 ஒக்டோபர் 16 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பாராளுமன்ற உறப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்கு சிரேஷ்ட உப தலைவர் பதவி வழங்கப்பட வேண்டுமென கட்சியின் சிரேஷ்டர்கள் குழுவொன்று யோசனை தெரிவித்துள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தயாசிறி ஜயசேகர மீண்டும் கட்சியில் இணைந்தால் கட்சியின் தலைவர், செயலாளர் அல்லது தேசிய அமைப்பாளர் பதவிகளை தவிர வேறு பதவிகள் வழங்கப்படலாம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னர் தெரிவித்திருந்தார்.
அதன்படி, அவருக்கு கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் எனஇ கட்சியின் மூத்த தலைவர்கள் குழு பரிந்துரைத்துள்ளதாக தெரியவருகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்கள் 6 பேர் உள்ள நிலையில், தயாசிறி ஜயசேகர அப்பதவியைப் பொறுப்பேற்றால், சிரேஷ்ட உப தலைவர்களின் எண்ணிக்கை 7 ஆக இருக்கும்.
இதேவேளை, தயாசிறி ஜயசேகர குடும்பத்துடன் வெளிநாட்டில் தற்போது இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
12 minute ago
20 minute ago
25 minute ago