2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

தயாசிறிக்கு இ.மி.ச சங்கம் பதிலடி

Freelancer   / 2022 பெப்ரவரி 17 , மு.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிகாரவர்க்கத்தினால் 40 மெகாவோட் புதுப்பிக்கத்தக்க சக்தி இழக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர முன்வைத்த குற்றச்சாட்டுக்கு இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தினர், நேற்று (16) பதிலளித்துள்ளனர்.

நியாயமான தொழில்நுட்ப பிரச்சினைகளே தாமதத்துக்கு காரணம் என்று இலங்கை மின்சார சபையின் மின்சார பொறியியலாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

உயர் மின்னழுத்தம் உள்ளிட்ட தொழில்நுட்ப பிரச்சினைகள் மற்றும் சம்பந்தப்பட்ட வீடு மற்றும் சுற்றுப்புற வீடுகளை பாதிக்கும் எனவும் மின்சாதனப் பொருட்கள் அதிக வெப்பமடைதல், மின்மாற்றி அளவுகள் மாறுதல், மின்சாரம் வழங்குவதில்  சிக்கல்கள் ஆகியவை அடங்கும் என சங்கம் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் சபையே பொறுப்பேற்க வேண்டும் என்பதுடன், மேலும் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் டொலர் கையிருப்பு மற்றும் எரிபொருள் வளங்களை காப்பாற்றுவதற்கு சூரிய சக்தியை வழங்குவதை மின்சாரசபை  விரும்புவதாகவும் பல பிரச்னைகளுக்கு இன்றுவரை தீர்வு கிடைக்கவில்லை என்றும் சங்கம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .