2025 மார்ச் 12, புதன்கிழமை

தமிழரசுக் கட்சியில் இணைந்தார் விந்தன்

Editorial   / 2025 மார்ச் 11 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்ஷன் வினோத்

தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண முன்னாள் உறுப்பினருமான விந்தன் கனகரட்னம் தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.

ரெலோ அமைப்பின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக இருந்து முன்னாள் மாநகர சபை மாகாண சபை உறுப்பினராக இருந்த விந்தன் கனகரட்னத்துக்கும் கட்சிக்கும் இடையில் அண்மைக்காலமாக முரண்பாடுகள் ஏற்பட்டு வந்திருந்தன.

இந்நிலையில், தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சிவஞானம் முன்னிலையில் தமிழரசுக் கட்சியில் இணைந்து உறுப்புரிமையை பெற்றுக் கொண்டுள்ளார். அவருடைய மகனும் இணைந்து​கொண்டு உறுப்புரிமையை பெற்றுக்கொண்டார்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஆயுதப் போராட்டம் முதல் அரசியல் பயணம் என நீண்ட கால உறுப்பினர் மட்டுமல்லாது அக் கட்சியின் முக்கியஸ்தராகவும் விளங்கி வந்த விந்தன் கனகரட்னம் திடீரென அக் கட்சியிலிருந்து வெளியேறி தமிழரசுக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .