2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

தமிழ்நாடு வரவு - செலவு திட்டம் இன்று தாக்கல்

Freelancer   / 2025 மார்ச் 14 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழக சட்டசபையில், இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் கூடியது. ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தும் நிகழ்வோடு தொடங்கி அந்த கூட்டத்தொடர் முடிவுக்கு வந்தது.

சட்டசபையின் அடுத்த கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. காலை 9.30 மணிக்கு சட்டசபையில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.

இந்த நிலையில், இன்று தாக்கல் செய்யப்படும் தமிழ்நாடு வரவு-செலவு திட்டத்தை சென்னையில் 100 இடங்களில் நேரலை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .