2025 மார்ச் 15, சனிக்கிழமை

தமிழக வரவு செலவு திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

Freelancer   / 2025 மார்ச் 15 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

2025- 2026 ஆம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது வரவு செலவு திட்டத்தை, சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று காலை சரியாக 9.30 மணியளவில் தாக்கல் செய்தார். தமிழக வரவு செலவு திட்ட உரையில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள் வருமாறு,

* முதல்வர் கிராம சாலை திட்டத்தின் கீழ் 6,100 கிலோ மீட்டர் நீளமுள்ள கிராம சாலைகள் 2,100 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.

* 10 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்.

* அரசு பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் தொகுப்பு நிதி 700 கோடி ரூபாவாக உயர்த்தப்படும்.

* அரசுப் பொறியியல் கல்லூரிகளில் திறன்மிகு மையங்கள் 50 கோடி ரூபாவாக செலவில் உருவாக்கப்படும்.

* அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் விருப்பப்படி கைக் கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும்.

* பெற்றோர் இருவரையும் இழந்த 50,000 குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதந்தோறும் 2,000 ரூபா வழங்கப்படும்.

* சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதுகள் வழங்கப்படும். 10 ஊராட்சிகளுக்கு தலா 1 கோடி ரூபா  ஊக்கத்தொகை வழங்கப்படும்.

* இராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்.

* சென்னை சைதாப்பேட்டை - தாடண்டர் நகரில் 110 கோடி ரூபா செலவில் 190 குடியிருப்புகள் கட்டப்படும்.

* 40,000 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்.

* சென்னைக்கு அருகில் உலகத் தர வசதிகளுடன் புதிய நகரம் அமைக்கப்படும்.

* கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 3,500 கோடி ரூபாவில் ஊரகப் பகுதிகளில் 1 லட்சம் புதிய வீடுகள் கட்டித்தரப்படும்.

* ஆண்டுதோறும் உலகத் தமிழ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படும். 1 கோடி ரூபா பரிசுத்தொகை வழங்கப்படும்.

வரவு செலவு திட்ட உரையை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு,

இந்தியாவின் 2 ஆவது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலம் தமிழகம் என்று பெருமிதம் தெரிவித்தார். மேலும், ‘பன்முக வளர்ச்சியை நோக்கி தமிழகம் முன்னேறி வருகிறது. மனிதநேயம், சமூக நீதி, பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்டு தமிழ்நாடு நடைபோடுகிறது. சமநிலை தவறாமல் தமிழகத்தை வழிநடத்துவோம் என்றார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .