Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 14, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2025 ஜனவரி 14 , மு.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒருவரை ஒருவர் மதித்தல் மற்றும் கைமாறு மறவாத உன்னத பண்புகள் என்பனவற்றைக் கொண்ட தமிழ் மக்களால் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகையானது உண்மையான கலாச்சார மதிப்பீடுகளை இவ்வுலகிற்கு எடுத்துரைக்கின்றது என பிரதமர் ஹரிணி அமரசூரிய விடுத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாற்று நடுவது முதல் விளைச்சலை அறுவடை செய்வதுவரை விவசாய நடவடிக்கைகளுக்கு சூரிய பகவான் உட்பட இயற்கை ஜீவராசிகள் அனைத்தும் செய்யும் உதவிகளுக்கு நன்றி செலுத்தவே இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது .
நாம் அனைவரும் இயற்கையின் படைப்புக்கள். இயற்கையை மீறி எம்மால் எந்த பயணத்தையும் மேற்கொள்ள முடியாது. இதனால் இயற்கையினூடாக எமக்கு கிடைக்கப்பெற்ற ஆசீர்வாதங்களுக்கு கைமாறு செய்வது மிகவும் உன்னதமான மனிதப் பண்பாகும். நாடு என்ற அடிப்படையில் நாம் விசேட மைல்கற்களை எட்டியுள்ளோம். கட்டமைப்பு மற்றும் கொள்கை ரீதியிலான மாற்றம் உட்பட, மனநிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தி மறுமலர்ச்சி யுகத்தை நோக்கி நாட்டைக் கொண்டு செல்லும் பாரிய மற்றும் பாரதூரமான பொறுப்பு எமக்கு உள்ளது. அரசாங்கம் மற்றும் அரசு என்ற அடிப்படையில் நாம் அந்த சவால்கள் நிறைந்த மற்றும் பொறுப்புவாய்ந்த செயற்பாடுகளை முன்னெடுத்து பரிணாம மாற்றத்தை நோக்கிய பயணத்தை ஆரம்பித்துள்ளோம்.
அவ்வாறான தருணங்களில் இயற்கையைப் போற்றி அதற்கு நன்றி செலுத்தும் இத்தகையதொரு அற்புதமான பண்டிகையைக் கொண்டாடுவது, மீண்டுமொரு முறை கலாச்சார ரீதியிலான செழிப்பான பிரஜைகளை உருவாக்குவதற்கு அடிப்படையாக அமையும். ஒருவரையொருவர் மதித்தல் மற்றும் மற்றவர்களின் மதம், கலாச்சார உரிமைகளை மதிக்கும் விசேட மனித பண்புகள் மற்றும் நல்லிணக்கத்தில் பூரணமடைந்த இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு இந்த தைப்பொங்கல் தினத்தில் நாம் மீண்டுமொரு முறை உறுதிகொள்வோம்.
தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் இலங்கை வாழ் மற்றும் உலக வாழ் தமிழ் சமூகத்தின் அனைத்து பிரார்த்தனைகளும் நிறைவேறும் மகிழ்ச்சிகரமான தைப்பொங்கல் தினமாக இன்றைய தினம் அமைய வேண்டுமென மனப்பூர்வமாக வாழ்த்துகின்றேன் என்றும் அந்த வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
36 minute ago
2 hours ago