Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை
Freelancer / 2024 டிசெம்பர் 25 , பி.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி 56 ரக துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் மெகசீன் ஆகியவற்றுடன் காணாமல் போன கடற்படை சிப்பாயை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
திருகோணமலை கடற்படை முகாமிற்கு சொந்தமான பொருட்களை ஏற்றிக்கொண்டு பாரவூர்தி ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த குறித்த சிப்பாய் வரகாபொல – வாரியகொட பிரதேசத்தில் வைத்துக் காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிப்பாய், தமது சகோதரர் இரவு உணவைக் கொண்டு வந்திருப்பதாகவும் அதனைப் பெற்றுக் கொள்ள செல்வதாகவும் கூறி சென்று பல மணி நேரங்கள் ஆகியும் மீள திரும்பவில்லை.
இது தொடர்பில் குறித்த பாரவூர்தியின் சாரதியாக செயற்பட்ட கடற்படை சிப்பாய் வரகாபொல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதற்கமைய, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய, டி ரக 56 துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் மெகசீன் ஆகியவற்றுடன் காணாமல் போன கடற்படை சிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
1 hours ago
2 hours ago
5 hours ago