Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 17, வியாழக்கிழமை
Editorial / 2025 ஏப்ரல் 08 , பி.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
2025 ஆம் ஆண்டு வரவு- செலவுத்திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு இணையாக தனியார் துறையின் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
அதற்கிணங்க, கீழ்க்காணும் வகையில், தேசிய குறைந்தபட்ச மாதாந்தச் சம்பளம் மற்றும் தேசிய குறைந்தபட்ச நாளாந்த சம்பளத்தை திருத்தம் செய்வதற்கும், அதற்குரிய ஏனைய சட்ட ரீதியான நடவடிக்கைகளைக் கடைப்பிடிப்பதற்கு, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில், திங்கட்கிழமை (07) நடைபெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில், தொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
• 2025.04.01 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் ரூபாய்ய் 17,500 தொடக்கம் ரூபாய் 27,000 வரைக்கும் ரூபாய் 9,500 இனால் தேசிய குறைந்தபட்ச மாதாந்தச் சம்பளத்தை அதிகரித்தல்
• 2025.04.01 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் ரூபாய் 700 தொடக்கம் ரூபாய் 1,080 வரைக்கும் ரூபாய் 380 இனால் தேசிய குறைந்தபட்ச நாளாந்த சம்பளத்தை அதிகரித்தல்
• 2026.01.01 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் ரூபாய் 27,000 தொடக்கம் ரூபாய் 30,000 வரைக்கும் ரூபாய் 3,000 இனால் தேசிய குறைந்தபட்ச மாதாந்தச் சம்பளத்தை அதிகரித்தல்
• 2026.01.01 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் ரூபாய் 1,080 தொடக்கம் ரூபாய் 1,200 வரைக்கும் ரூபாய் 120 இனால் தேசிய குறைந்தபட்ச நாளாந்த சம்பளத்தை அதிகரித்தல் ஆகிய முன்மொழிவுகளுக்கே அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
16 Apr 2025