2025 ஜனவரி 03, வெள்ளிக்கிழமை

தனிமையில் வசித்த முதியவர் சடலமாக மீட்பு

Freelancer   / 2024 டிசெம்பர் 31 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் தனிமையில் வசித்து வந்த வயோதிபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (30) வீட்டில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர் உச்சிக்காடு, கரணவாய் தெற்கைச் சேர்ந்த மாணிக்கம் குணசேகரம் (வயது- 65) என்ற வயோதிபராவார். 

இரண்டு பிள்ளைகள் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் இவர், தனிமையில் வசித்து இருந்த நிலையில் நேற்று (30) கட்டிலில் உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

 சம்பவ இடத்திற்க்கு சென்ற கரவெட்டி மரண விசாரணை அதிகாரி வே.பாஸ்கரன் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத சோதனைக்கு உத்தரவிட்டார். இது தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X