2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

​தென்னக்கோன் விவகாரம்: பொலிஸ் விசாரணைக் குழு நியமனம்

Editorial   / 2025 ஏப்ரல் 29 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தனது பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்க பொலிஸ் விசாரணைக் குழு நியமிக்கப்பட்டது

பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னக்கோன் தனது பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்க பொலிஸ் விசாரணைக் குழுவொன்றைப் பரிந்துரைக்குமாறு, விசாரணைக் குழு விடுத்த கோரிக்கைக்கு அமைய பதில் பொலிஸ்மா அதிபர் குறித்த விசாரணைக் குழுவை நியமித்துள்ளார்.

இந்த விசாரணைக் குழு பாராளுமன்றத்தில் மூன்றாவது தடவையாக திங்கட்கிழமை (28) கூடியபோது நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் விசாரணைக் குழுவின் ஒத்துழைப்புடன் எதிர்கால விசாரணைகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன், 2025.04.30ஆம் திகதி மீண்டும் கூடுவதற்கு இந்த விசாரணைக் குழு தீர்மானித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .