2025 மார்ச் 25, செவ்வாய்க்கிழமை

தென் கொரியாவில் இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை

S.Renuka   / 2025 மார்ச் 23 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் கொரியாவின் தென்கிழக்கு பிராந்தியங்களில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று தென் கொரியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

அந்தப் பகுதிகளில் வசிக்கும் இலங்கையர்களின் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

தென் கொரியாவில் சுமார் 35,000 இலங்கைத் தொழிலாளர்கள் உள்ளனர்.
தென்கிழக்கு பிராந்தியங்களில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

தீயை அணைக்க தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X