2025 ஏப்ரல் 15, செவ்வாய்க்கிழமை

தந்தையின் லொறியில் சிக்கி குழந்தை பலி

Freelancer   / 2025 ஏப்ரல் 14 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ருக்மல்கந்துர பகுதியில் லொறியின் இடது பின்பக்கச் சக்கரத்தின் கீழ் சிக்கி ஒரு வயது ஏழு மாதக் குழந்தை உயிரிழந்துள்ளது.

வீட்டு முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொறியை குழந்தையின் தந்தை பின்னோக்கி இயக்கிய போது, இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் படுகாயமடைந்த குழந்தை பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தை ஏற்படுத்திய 39 வயதான தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X