2025 ஜனவரி 05, ஞாயிற்றுக்கிழமை

’தூதுவர்களை நியமிக்க கால அவகாசம் தேவை’

Freelancer   / 2025 ஜனவரி 03 , பி.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் பல தூதுவர் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களுக்கான அரசியல் நியமனங்கள் நிறுத்தப்பட்டதன் காரணமாக பல அலுவலகங்களில் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 

ஆனால், தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை நியமிப்பது ஒரு சிக்கலான செயல் என்றும், அதற்கு நியாயமான கால அவகாசம் தேவை என்றும் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

அரசியலமைப்பின் பிரகாரம், வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுவதாக, வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர் அல்லது உயர்ஸ்தானிகர் ஒருவரை ஜனாதிபதி நியமிக்கும் போது, அந்த நியமனத்திற்கு அந்த நாட்டின் சம்மதத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.AN


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X