2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

தேசிய பாதுகாப்பு விழிப்புணர்வை மேம்படுத்த புதிய திட்டம் ஆரம்பம்

Freelancer   / 2024 ஒக்டோபர் 12 , பி.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கிய தகவல்களை நேரடியாக அலைபேசிகளுக்கு  குறுஞ்செய்தி மூலம் அனுப்பும் திட்டமொன்று ஆரம்பிக்கயப்படவுள்ளது.

இந்த திட்டம், அவசரகால சூழ்நிலைகளின் போது உடனடி அறிவிப்புகளை வழங்கும் என, பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கேர்ணல் நளின் ஹேரத் தெரிவித்தார். 

கூடுதலாக,  மனித கடத்தல் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளும் முகமாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

அலைபேசி சேவை வழங்குநர்கள் மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒத்துழைப்புடன் இந்த முயற்சி செயற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (AN)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .