2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

தங்க ஜெல்லை அந்தரங்கத்தில் பதுக்கிய பெண் கைது

Editorial   / 2023 ஜூலை 04 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இளம் பெண்ணொருவர் பத்து கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான தங்க ஜெல் கரைசல் அடங்கிய 04 பொதிகளை, தனது அந்தரங்கப் பகுதியில் மறைத்து வைத்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்ற போது கைது செய்யப்பட்டார்.

  விமான நிலையத்தில் தீர்வையற்ற கடைத்தொகுதியில் (அழகுசாதான பொருட்கள் விற்பனை நிலையம்) கடமையாற்றும் 24 வயதான பெண்ணொருவரே இவ்வாறு, செவ்வாய்க்கிழமை (04) காலை கைது செய்யப்பட்டார்.

 கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து 05 கிலோ கிராமுக்கும் அதிகமான தங்க ஜெல் அடங்கிய 04 பொதிகளை தனது அந்தரங்கப் பகுதியில் மறைத்து வைத்துக்கொண்டு காலை 8.45 மணியளவில் வெளியேற முயன்ற போதே கைது செய்யப்பட்டார்.

 இந்த பெண்ணும் கைப்பற்றப்பட்ட தங்க ஜெல் அடங்கிய பொதிகளும்  மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .