Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை
S.Renuka / 2025 ஏப்ரல் 10 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேங்காய் எண்ணெய் என்ற பெயரில் சந்தையில் விற்கப்படும் தேங்காய் எண்ணெய்களின் தரம் குறித்து ஆராயுமாறு தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பிரதம அமைப்பாளர் புத்திக டி சில்வா, நுகர்வோர் அதிகார சபையிடம், புதன்கிழமை (09) அன்று கோரிக்கை விடுத்தார்.
சந்தையில் உள்ள தேங்காய் விலையின்படி, ஒரு போத்தல் தேங்காய் எண்ணெய் 750 ரூபாய்க்கு விற்கப்படுகிறது, மேலும் அது உண்மையில் தேங்காய் எண்ணெய்தானா என்பதைக் கண்டறியுமாறு புத்திக கேட்டு கொண்டுள்ளார்.
மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 05 கொள்கலன் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக மூன்று சுங்க அதிகாரிகளுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
குறித்த பொருத்தமற்ற எண்ணெய் மனித நுகர்வுக்காக வெளியிடப்பட்டதா? என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த விடயத்தை ஆராய எந்த பொறுப்பான நிறுவனம் இல்லாதது மக்களின் துரதிர்ஷ்டம் என்றும், தேங்காய் எண்ணெய் என்ற பெயரில் இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாடுகளில் இருந்து பயன்படுத்தப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு சந்தையில் விற்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
இறக்குமதியாளர்கள் 25,000 முதல் 30,000 மெட்ரிக் தொன் அத்தகைய எண்ணெய்யைச் சேமித்து வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தேங்காய் மேம்பாட்டு ஆணையம் முறையான விசாரணை நடத்தாததால் சந்தையில் ஒரு தேங்காயின் விலை இன்னும் 200 முதல் 250 ரூபாய் வரை உள்ளது என்று அவர் கூறினார்.
மே முதல் செப்டம்பர் வரை நாட்டின் தேங்காய் அறுவடை படிப்படியாக அதிகரிக்கும் என்றும், தேங்காய் மேம்பாட்டு ஆணையம் அதன் அதிகாரங்களை பயன்படுத்தாவிட்டால், தேங்காய்களின் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் அவர் வலியுறுத்தினார்.
தேங்காய் பற்றாக்குறையின் போது தேங்காய் இறக்குமதி செய்வதே தேங்காய்களின் விலை உயர்வுக்குக் காரணம் என்றும், பன்னாட்டு நிறுவனங்கள் தேங்காய்களை இறக்குமதி செய்ய சில அதிகாரிகளின் ஆதரவைப் பெறும் என்றும் அவர் நம்புவதாக புத்திக டி சில்வா மேலும் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
2 hours ago
4 hours ago
9 hours ago