2025 ஏப்ரல் 20, ஞாயிற்றுக்கிழமை

தக்காளிச்சாறு உரிமையாளருக்கு சிறை

Editorial   / 2024 செப்டெம்பர் 15 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

தக்காளிபழ சாறு கலவையில் உணவு பாதுகாப்பு விதிகளை மீறி மனித சுகாதாரத்திற்கு  தீங்கு விளைவிக்கும் பென்சோயிக் அமிலம்,

செயற்கை நிறமூட்டி கொண்டு தயாரிக்கப்பட்ட கலவையை பாவித்த சிற்றுண்டிச் சாலை உரிமையாளர், விநியோகித்தல், மற்றும் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் ஆகியோருக்கு எதிராக  சுகாதார பரிசோதகரால் வழக்குத் தொடுக்கபட்டிருந்தது.

மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள பொது சுகாதார பரிசோதகர் எஸ்.ரவிகரனால்  தொடுக்கப்பட்ட வழக்கில் தக்காளி சாறு கலவை நிறுவன உரிமையாளருக்கு ரூபாய் 36, 000 தண்டப்பணமும் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6 மாத கால சிறை தண்டனை துமாக தண்டனையை நீதவான் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (13) வழங்கியுள்ளது.

இதை வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் பொது சுகாதார பரிசோதகர் எஸ்.ரவிகரன் உறுதிப்படுத்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X