2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

டெங்கு பரவும் இடங்களை தேடியது ட்ரோன்

Freelancer   / 2022 ஜனவரி 31 , பி.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களைக் கண்றிவதற்கு ஹொரணையில் இன்று (31) ட்ரோன் கமெரா மூலமான  விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மேல் மாகாண ஆளுநரும் விமானப்படை மார்ஷலுமான ரொஷான் குணதிலகவின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையை ஆளுநரின் செயல்பாட்டு அறை மற்றும் விமானப்படை இணைந்து இந்த மேற்கொண்டன.

ஹொரணை சுகாதார வைத்திய அதிகாரி, ஹொரண பொலிஸ் மற்றும் ஹொரண மாநகர சபை ஆகியோர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

ட்ரோன் கமெரா மூலம் நகரில் உள்ள கட்டடங்கள் உட்பட உயரமான இடங்களில் டெங்கு பரவும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

பின்னர், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸார் அந்த இடங்களின் உரிமையாளர்களை எச்சரித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .