Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Janu / 2023 ஒக்டோபர் 05 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயர்தரப் பரீட்சை ஜனவரியில் நடைபெறுவதால் டிசெம்பர் மாத பாடசாலை விடுமுறையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.இதன்படி பாடசாலை தவணை விடுமுறை டிசெம்பர் 22ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) உயர்தரப் பரீட்சை தொடர்பில் கருத்துக்களை முன்வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
அமைச்சர் இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
“உயர்தரப் பரீட்சை தினம் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ஜனவரி 4 முதல் 31 ஆம் திகதி வரையில் பரீட்சை நடக்கவுள்ளது. இதன்படி யாரேனும் விண்ணப்பிக்க இருந்தால் அவர்களுக்கு 3 நாட்கள் வழங்கப்பட்டுள்ளது. பரீட்சை தொடர்பான கால அட்டவணை அடுத்த வாரமளவில் வெளியிடப்படும்.
இதேவேளை பாடசாலை விடுமுறை இம்முறை டிசெம்பர் 22ஆம் திகதியளவில் வழங்கப்படலாம். ஆரம்ப பிரிவுகள் ஜனவரி 2ஆம் திகதி ஆரம்பிக்கப்படும். பரீட்சை முடிவடைந்த பின்னர் மற்றைய பாடசாலைகள் ஆரம்பிக்கப்படலாம். இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் கல்வி அமைச்சினால் வெளியிடப்படும்” என்றுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago