2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

ஞாயிறன்று சபை கூடும்

Editorial   / 2023 டிசெம்பர் 05 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஞாயிற்றுக்கிழமை 10 ஆம் திகதி நடைபெறவுள்ள, பெறுமதி சேர் வரி (வற்) திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்துக்கு பாராளுமன்றம், செவ்வாய்க்கிழமை (05) அங்கீகாரம் வழங்கியது.

நிலையியற் கட்டளையின் பிரகாரம் ஞாயிற்றுக்கிழமைகளில் பாராளுமன்றத்தை கூட்ட முடியாது. அப்படியானால், நிலையான உத்தரவுகளை நிறுத்தி வைக்க வேண்டும்.

இந்த விவாதத்திற்காக, சபையின் கூட்டத்திற்கான நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்துவதற்கு பாராளுமன்றம் அங்கீகரித்துள்ளது. நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்துவதற்கான பிரேரணை சபைத் தலைவர் அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவினால்  பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (05)  சமர்ப்பிக்கப்பட்டது.

இதன் ​அடிப்படையில், ஞாயிறுக்கிழமை (10) காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை பாராளுமன்றம் கூடும்.

இதற்கு முன்னதாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 10ஆம் திகதி வற் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தை நடத்துவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .