2024 செப்டெம்பர் 08, ஞாயிற்றுக்கிழமை

’ஜே .வி.பி, தூண்டி விட்டு வீதிக்கு இறக்குகின்றனர்’

Freelancer   / 2024 ஜூலை 24 , மு.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொழிற்சங்கத்தினரை ஜே .வி.பியினர்  தூண்டி வீதிக்கிறக்குகின்றனர் அதனால் தொழிலுக்கு ஆபத்து ஏற்படும்  ஊழியர்களிடமிருந்து ஜே. வி.பி.சட்டத்தரணிகள் பணம் உழைகின்றனர் என  மின்சக்தி  மற்றும்  வலு சக்தி  அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற   வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது பிரேம்நாத் சி.தொலவத்தே எம்.பி எழுப்பிய முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறுத்தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
 
புதிய மின்சார சபை சட்டத்தை  நிறைவேற்றினால் மின்கட்டமைப்பு துறையின் சகல கட்டமைப்புக்களும் தனியார் மயப்படுத்தப்படும் என்று கூறிக் கொண்டு கடந்த ஜனவரி மாதம் அரசியல் நோக்கங்களை முன்னிலைப்படுத்தி மின்சார சபை தொழிற்சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பு போராட்டங்களிலும்,தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் இறங்கினார்கள்.

மின்சார சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மின் விநியோகம் மற்றும் பொது சேவைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுங்கள் என்று அறிவுறுத்தினோம் என்றார் 

 தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்காக இலவசமாக நீதிமன்றில் ஆஜராகுவதாக  வாக்குறுதி வழங்கிய  ஜே .வி.பி. யின் சட்டத்தரணி  சுனில் வடகல, தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டதனால்  பணி இடைநிறுத்தப்பட்டுள்ள மின்சார சபையின் 62  ஊழியர்களிடமிருந்து வழக்கு கட்டணமாக  55 இலட்சம் ரூபாவை   பெற்றுக்கொண்டுள்ளார் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X