2025 ஜனவரி 08, புதன்கிழமை

ஜப்பானிடமிருந்து நிதி, தொழில்நுட்ப உதவிகள்

Freelancer   / 2025 ஜனவரி 08 , மு.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜய்கா எனப்படும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவரகம் இலங்கைக்கான தங்களது நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை இடையூறு இல்லாமல் தொடர்ந்து மேற்கொள்ளும் என அதன் சிரேஷ்ட துணைத் தலைவர் ஹரா ஷொஹெய் தெரிவித்துள்ளார். 
 
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். 
 
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஜப்பானிய உதவியின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் அவதானம் இதன்போது, செலுத்தப்பட்டுள்ளது. 
 
ஜய்காவின் ஆதரவின் கீழ் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும் துரிதப்படுத்தப்பட்டு வினைத்திறனுடன் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. 
 
அதேநேரம், நாட்டின் கடன் மறுசீரமைப்பு செயல்பாட்டின் போது வழங்கப்பட்ட உதவிகளைப் போன்று, எதிர்காலத்தில் இலங்கைக்கு நிதி உதவிகளை வழங்குவதற்கான ஜய்காவின் உறுதிப்பாட்டை அதன் சிரேஷ்ட துணைத் தலைவர் ஹரா ஷொஹெய் வலியுறுத்தியுள்ளார். 
 
'க்ளீன் ஸ்ரீலங்கா' வேலைத்திட்டம் மற்றும் ஏனைய முயற்சிகளுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு ஜய்கா தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். 
 
இதனிடையே இலங்கையின் போக்குவரத்து முறைமையை மறுசீரமைப்பதற்கும், நிதி மற்றும் தளபாட உதவிகள் மூலம் நகர்ப்புற தூய்மையை மேம்படுத்துவதற்கும் ஆதரவளிப்பதாக ஜய்கா எனப்படும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவரகத்தின் சிரேஷ்ட துணைத் தலைவர் ஹரா ஷொஹெய் தெரிவித்துள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X