Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 மார்ச் 08 , பி.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 11 பேர் அடங்கிய பொருளாதார பேரவையை நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தும் நோக்கில் 'பொருளாதார பேரவை' வாராந்தம் கூடுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
அதற்கமைய, ஜனாதிபதி, பிரதமர், வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னான்டோ, நிதி அமைச்சர்பசில் ராஜபக்ஷ, விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுக்கமகே, பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன, இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், திறைசேரி செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல, இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் தம்மிக்க நாணயக்கார ஆகியோர் பேரவையின் அங்கத்தவர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
பெருநிலைப் பொருளாதாரக் கொள்கை, கொவிட் - 19 பெருந்தொற்று நிலைமையின் பின்னர் தேசிய பொருளாதாரத்தின் செயற்பாடு, பொருளாதார மீள்கட்டமைத்தல், அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை மற்றும் நிதிக் கொள்கைகளில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய அபிவிருத்திக் கருத்திட்டங்கள் உள்ளிட்ட உள்ளூர் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பாக மிகவும் ஆழமாகக் கலந்துரையாடி ஒட்டுமொத்த பொருளாதார முகாமைத்துவத்தை மேற்கொள்ளப்படவுள்ளது.
குறித்த பேரவையின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களுக்கமைய ஏற்புடைய அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்கள் தேவையான சந்தர்ப்பங்களில் அமைச்சரவையின் அங்கிகாரத்துடன் இயைபுடைய தீர்மானங்களை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
தேவைக்கேற்ப பொருளாதாரப் பேரவைக் கூட்டத்துக்கு போதுமான துறைசார் அறிவுகொண்ட கல்வியியலாளர்களை அழைக்கவும், ஜனாதிபதியால் மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படும் படிமுறைகள் தொடர்பாக அமைச்சரவையின் உடன்பாட்டை வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago
1 hours ago