Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை
Janu / 2025 ஏப்ரல் 06 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
பலவந்தமாக எரிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு ஆதரவு தெரிவித்து பிரார்த்தனை செய்யும் நினைவு தின நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச பங்கேற்றார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளை மீறி, கடந்த கொரோனா காலத்தில் கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் உடல்கள் கடந்த அரசாங்கத்தால் வலுக்கட்டாயமாக தகனம் செய்யப்பட்டன. இதனால், முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் உரிமை பெரிதும் பாதிக்கப்பட்டது.
இதன் பொருட்டு, கொரோனா தொற்றுக்குள்ளாகிய நிலையில் வலுக்கட்டாயமாக எரிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு ஆதரவு தெரிவித்து பிரார்த்தனை செய்யும் நினைவு தின நிகழ்வொன்று ,கொழும்பு- 06 இல் அமைந்துள்ள மரைன் கிராண்ட் வரவேற்பு மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (06)இடம்பெற்றது.
இலங்கை முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில், ஏற்பாட்டுக் குழுவின் அழைப்பின் பேரில் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச கலந்து கொண்டு தனது வருத்தத்தையும் ஆதரவையும் தெரிவித்தார்.
இந்த ஜனாஸா எரிப்பு விவகாரத்தில் சில அரசியல் தலைவர்கள் அன்று முஸ்லிம்களின் உரிமைகளுக்காக முன் நிற்கவில்லை. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் இந்த உரிமைக்காகத் தொடர்ந்தும் குரல் எழுப்பி வந்தது.
அடிப்படை மனித உரிமைகளையும், மத உரிமைகளையும் மீறி பலவந்தமாக எரிக்கப்பட்ட முஸ்லிம் ஜனாஸாக்கள் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் ஆறாத வடுக்களை விட்டுச் சென்றுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
13 minute ago
19 minute ago
2 hours ago