2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

’’ஜனாதிபதியின் புத்தாண்டு SMSகள் இலவசமானவை’’

Simrith   / 2025 ஏப்ரல் 23 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு சார்பான அதிகாரிகள், பொதுமக்களுக்கு அனுப்பப்பட்ட புத்தாண்டு குறுஞ்செய்திகளுக்கு ரூ.98 மில்லியன் செலவிடப்பட்டதாக கூறப்படுவதை மறுத்துள்ளனர். 

முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகத்துடன் தொடர்புடைய டினுக் கொலம்பகே கூறுகையில், முந்தைய ஜனாதிபதிகளிடமிருந்து பொதுமக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துச் செய்திகள் இலவசமாக அனுப்பப்பட்டன. 

"இது தொலைத்தொடர்பு விநியோகத்தர்களால் வழங்கப்படும் சேவை" என்று அவர் தனது 'X'  பக்க பதிவு ஒன்றில் கூறினார். 

கடந்த ஆண்டு மட்டும், இலங்கை ஜனாதிபதியின் வருடாந்திர சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு குறுஞ்செய்தி செய்தியை அனுப்புவதற்கு ரூ. 98 மில்லியன் செலவிடப்பட்டதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி தெரிவித்ததைத் தொடர்ந்து அவர் இவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .