2025 ஜனவரி 08, புதன்கிழமை

ஜனாதிபதி அடுத்த வாரம் சீனா விஜயம்

Simrith   / 2025 ஜனவரி 07 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க 2025 ஜனவரி 14 முதல் 17 வரை சீனாவுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொள்வார் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை அமர்வின் பின்னரான ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ ஜனாதிபதியின் சீன விஜயம் தொடர்பான விபரங்களை தெரிவித்தார். 

ஜனாதிபதியுடன் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோரும் சீனா செல்லவுள்ளனர்.

அமைச்சர் ஜயதிஸ்ஸ மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி இந்த வருடம் சீனாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில், சீன-இலங்கை இராஜதந்திர உறவுகள் 68 வருடங்களை பூர்த்தி செய்யும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X