2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

’’சோல்’’பொக்கெட்டில் 3 நெக்லஸ்கள் சிக்கின

Editorial   / 2025 ஜனவரி 19 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

​டி.கே.ஜி.கபில 

தலை மற்றும் கழுத்தை சுற்றி அணியும் "சோல்" என்றழைக்கப்படும் ஒரு மேலங்கியில் ஒரு போலிப் பாக்கெட் தயாரித்து அதற்குள் 4.9 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள03 தங்க நெக்லஸ்களை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துசெல்ல முயன்ற பெண், ஞாயிற்றுக்கிழமை (19) காலை பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் அதிகாரிகள்குழுவால் கைது செய்யப்பட்டார்.

வத்தளை, ஹெந்தலையைச் சேர்ந்த54 வயதுடைய பெண்மணி, விமானம் மூலம் நாட்டிற்கு பல்வேறு பொருட்களை கொண்டு வந்து விற்பனைசெய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ள ஒரு பெண்ணுக்கு பயண உதவியாளராக பணிபுரிகிறார்.

துபாயிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-226 மூலம் கட்டுநாயக்கவிமான நிலையத்திற்கு ஞாயிற்றுக்கிழமை (19) காலை 05.15 மணிக்கு  வந்திருந்தார்.

அவர் தனது கழுத்தை சுற்றி அணிந்திருந்த "சோல்" சால்வைக்குள் விசேடமாக தைக்கப்பட்ட போலிபாக்கெட்டுக்குள் 216 கிராம் எடையுள்ள இந்த மூன்று தங்க நெக்லஸ்களை மறைத்து வைத்திருந்த போது,பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

மேலதிக விசாரணைக்காக அந்தப்பெண்ணையும் தங்க நெக்லஸையும் கட்டுநாயக்க நாயக்கந்த சுங்கத் தடுப்பு அலுவலக அதிகாரிகளிடம்ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த பெண்ணின் முக்கிய தொழிலதிபர் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சட்டவிரோதமாக தங்க நெக்லஸை எடுத்துச் சென்றபோதுகட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X