Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Editorial / 2024 ஜூலை 12 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
தன் சொந்த தங்கையை கோடாரியால் அண்ணன் வெட்டிய சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
IFrame ஆந்திரா மாநிலம், அனந்தபூர் பகுதியில் உள்ள பெனகசெர்லா கிராமத்தில் இந்த கொடூரச் சம்பவம் நடைபெற்றுள்ளது. நிலத்தகராறு காரணமாக ஒருவர் தனது சகோதரியை கோடாரியால் தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்த பொஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணைக் கோடாரியால் தாக்கியவரை பிடித்தனர். வெட்டப்பட்ட பெண் மெஹபூபி என்றும், அவரை கோடாரியால் வெட்டியவர் ஜிலானி என்பதும் தெரிய வந்தது. தாக்குதலில் காயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸார் நடத்திய விசாரணையில், பெனகசெர்லா கிராமத்தில் ஜிலானியின் தங்கை மெஹபூபி ஒரு வீட்டில் வசித்து வந்தார். அந்த வீட்டைக் காலிச் செய்யச் சொல்லி ஜிலானி மிரட்டி வந்துள்ளார். அவர் வீட்டைக் காலி செய்யாத ஆத்திரத்தில் ஜிலானி கோடாரியால் தாக்கியது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து மெஹபூபியை தாக்கிய ஜிலானியை பொலிஸார் கைது செய்துள்ளனர். சட்டப்படி, அந்த வீடு யாருடையது என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
19 minute ago
40 minute ago