2024 நவம்பர் 23, சனிக்கிழமை

செலவு அறிக்கையை சமர்ப்பிக்காதவர்களுக்கு எதிராக வழக்கு

Freelancer   / 2024 நவம்பர் 16 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத அனைத்து வேட்பாளர்களுக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கும் எதிராக வழக்கு தொடரப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டத்தின்படி, தேர்தல் முடிந்த 21 நாட்களுக்குள் அனைத்து செலவு அறிக்கைகளையும் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

 பொதுத் தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 8,888 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில், உரிய நேரத்தில் வருமான அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல் ஆணையாளர் சிந்தக குலரத்ன தெரிவித்தார்.AN


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .