Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 23, சனிக்கிழமை
Freelancer / 2022 பெப்ரவரி 07 , மு.ப. 07:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கான செலவுகளை மேலும் கட்டுப்படுத்துமாறு நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
ஒருங்கிணைக்கப்பட்ட நிதியிலிருந்து எரிபொருள் கொடுப்பனவுகளைப் பெறும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களின் எரிபொருள் செலவினங்களை மட்டுப்படுத்தவும் அது வலியுறுத்தியுள்ளது.
மேலும், தொலைபேசி மற்றும் மின்சார செலவுகள் போன்ற அரச நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் அனைத்து செலவுகளையும் கண்டிப்பாக கட்டுப்படுத்துமாறு நிதியமைச்சு கோரியுள்ளது.
இது தொடர்பில் நிதியமைச்சகம் ஏற்கனவே அனைத்து அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் தொடர்ச்சியான சிறப்பு அறிவுறுத்தல்களை அனுப்பியுள்ளது.
டிசம்பர் 21-ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையிலும், ஜனவரி 12-ஆம் திகதி வெளியிடப்பட்ட அர செலவினங்களைக் கட்டுப்படுத்தும் சுற்றறிக்கையிலும் உள்ள உத்தரவுகளை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள திட்டங்களைத் தவிர வேறு எந்த திட்டங்களுக்கும் நிதி கோருவதைத் தவிர்க்குமாறு அனைத்து அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு நிதியமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
2 hours ago
2 hours ago