2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை

சென்னை​யில் 40 விவ​சா​யிகள் கைது

Freelancer   / 2025 மார்ச் 24 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி வேளாண் விளைபொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்யாத மத்திய அரசை கண்டித்து சென்னையில் ரயில் மறியல் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

பஞ்சாபில் போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னை, உசிலம்பட்டி, மயிலாடுதுறை, திருப்பூரில் நேற்று ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அறிவித்தது.

அதன்படி, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்துவதற்காக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி தலைமையில் விவசாயிகள் சென்றனர். பொலிஸார் தடுத்து நிறுத்தியதையும் மீறி ரயில் நிலையத்துக்குள் சென்று மறியலில் ஈடுபட முயன்றதால் 40 விவசாயிகளும் கைது செய்யப்பட்டனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X