Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2025 மார்ச் 24 , மு.ப. 08:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல இந்திய நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்கும், நடிகை ரியா சக்கரபோர்த்திக்கும் எந்த தொடர்பும் இல்லை என அந்நாட்டு சி.பி.ஐ. தரப்பில் நீதிமன்றத்தில் அறிக்கையொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் கொலை என்பதை சந்தேகிக்க எந்த அறிவியல் ஆதாரமும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ள சிபிஐ, மன அழுத்தம் காரணமாக சுஷாந்த் சிங் ராஜ்புத் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என கூறியுள்ளது.
இதன்படி, நடிகை ரியா சக்கரபோர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் உத்தியோகப்பூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர்களுக்கும் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14, 2020 அன்று தனது மும்பை வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
2 hours ago