2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

சுவர் இடிந்து விழுந்ததில் 9 குழந்தைகள் பலி

Freelancer   / 2024 ஓகஸ்ட் 05 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்தியப் பிரதேசத்தில் மத நிகழ்வில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 9 குழந்தைகள் உயிரிழந்தனர். மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டம் ஷாபூர் கிராமத்தில் இத்துயரச் சம்பவம் நடந்துள்ளது.

இது தொடர்பாக சாகர் பகுதி பொலிஸ்  ஆணையர் வீரேந்திரா சிங் ராவத் கூறுகையில்,

எங்களுக்குக் கிடைத்த தவலின்படி சாகர் மாவட்டம் ஷாபூரில் நடந்த ஹர்தல் பாபா மத நிகழ்வின்போது நிகழ்ச்சி நடந்த அரங்கின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் இந்த விபத்து நடந்துள்ளது. இதுவரை 9 குழந்தைகள் உயிரிழந்ததும் உறுதியாகியுள்ளது. அவர்கள் அனைவரும் 10 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்களாவர் என்றார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .