Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Freelancer / 2025 மார்ச் 18 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை ஈர்ப்புள்ள சுற்றுலா தலமாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், எமது நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தரமான உட்கட்டமைப்பு மற்றும் சேவைகளை வழங்குவது அவசியம் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.
எனவே, இந்த விடயத்தில் விசேட கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
சுற்றுலா அமைச்சின் அதிகாரிகளுடன் நேற்று (17) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் சுற்றுலா அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அதன் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அதிகாரிகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
சுற்றுலாத் துறையில் புதிய முன்னெடுப்பாக இந்த ஆண்டு 03 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு அழைத்து வர எதிர்பார்க்கப்படுவதோடு அதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு இந்த ஏற்பாடுகளைப் பயன்படுத்துவது குறித்தும் இதன்போது பரவலாக ஆராயப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், சுற்றுலா பிரதி அமைச்சர் கலாநிதி ருவன் ரணசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா மற்றும் சுற்றுலா அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
40 minute ago
40 minute ago