2025 ஏப்ரல் 11, வெள்ளிக்கிழமை

சில பகுதிகளுக்கு நாளை நீர் வெட்டு

S.Renuka   / 2025 மார்ச் 26 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் சில  பகுதிகளில் நாளை  வியாழக்கிழமை (27) 27 காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை அறிவித்துள்ளது. 

அதன்படி, பேலியகொடை, வத்தளை, ஜா - எல, கட்டுநாயக்க, சீதுவை நகர சபை பகுதிகள், களனி, பியகம, மஹர, தொம்பே, கட்டான, மினுவாங்கொடை மற்றும் கம்பஹா பிரதேச சபையைச் சேர்ந்த பகுதிகளுக்கு வியாழக்கிழமை (27) காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணிவரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மின்சார அமைப்பில் அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றமை காரணமாகவே நீர் வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X